தோஷங்களை நீக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்..!!

➽ நாக, புத்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்
➽ கடும் வியாதிகளில் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்
➽ கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ஜூரகேஸ்வரர்
➽ ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி
➽ மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்
➽ குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்
➽ விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்
மன நோய் அகற்றும் திருவிடை மருதூர் :
✽ சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட லிங்கமானதால் இவர் 'மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத்திருக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை ருண விமோச்சனர் :
✜ கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது 'திருச்சேறை உடையார் கோவில்". இங்கு தனி சன்னதியில் 'ருண விமோச்சனராய்" அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது.
தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :
✮ பூமாதேவி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக்கோயில் இது. இத்தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். 'பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன்" என இத்தல நாயகனை திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இத்தலத்தில், நோய் தீர்க்கும், 'ஸ்ரீ வைத்திய நாதர்" சன்னதியும் அமைந்துள்ளது. இத்தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித்தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் திருவாடுதுறை :
✿ கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் 'திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக