★ கவனம் தேவை,மூளையைத் தூங்க விடாதீர்கள்
★
நினைவாற்றலை மேம் படுத்த எளிய வழிகள். பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழி முறைகளை கடைப் பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே
பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.
முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக,
100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி
குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரிய வரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த
மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதை விட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள்.(உதாரணமாக 9 மணிக்கு முத்துபழனியப்பன் அவர்களை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த
அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத் திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள்.
இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்
விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை
கொடுத்துக் கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம் படுத்துங்கள்
நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் மகிழ்ச்சியை பெறுவதற்காகத் தான்...அதற்கான முயற்சிகள் தான்.
துக்கத்தை தேடுவோமா? அதற்காக முயற்சி செய்வோமா...? இல்லையே... எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதன் அடிப்படை நோக்கம் மகிழ்ச்சியை அடைவாதாகவே தான் இருக்கும்...
மகிழ்ச்சி ஒன்றே மனிதனின் குறிக்கோள்.... மகிழ்ச்சி ஒன்றே வாழ்க்கை.... அது துறவறமாகவோ..
எல்லாம் துறந்தவராகவோ இருந்தாலும் அவருக்கு தேவைப் பட்ட மகிழ்ச்சியை தேடியே பற்றற்ற நிலையை தேடுகின்றனர்.. அவரது மகிழ்ச்சி அங்கே தான்.. அதனில் தான்...
உணவு.. உடை... படிப்பு.. வசதிகள்... எல்லாமே மகிழ்ச்சியை எதிர் நோக்கி தான்.... குடும்ப உறவுகளை தேடிக் கொள்வதும்.. நட்பை நாடுவதும்...
ஒரு வேலை தேடிக் கொள்வதும்... வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பதும்... எல்லாம் மகிழ்ச்சிக்காகவே.....
உன்மையில் பார்க்கப் போனால்... அன்பு.. அமைதி... அறிவு... நிம்மதி.. சந்தோஷங்கள் இவை எல்லாம் எதோ.. ரூபத்தில் பரிபூரணமாக அமைவதே மகிழ்ச்சியாக கருதப் படுகிறது....
நமது சுயத்தை பரிபூரணமாக உணர்கின்ற போது.. பரிபூரண மகிழ்ச்சியை அடைவதும் உண்மை தான்...
இன்று மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு பொருளோ.. உறவோ.. அலுத்து போனால் என்ன செய்கின்றோம்.. அதனை உதறி
விட்டு... அடுத்ததுக்கு தாவுகின்றோம்....
மீண்டும் மற்றொன்று.....
ஆக நமது ஆவலுக்கும்...
தாவலுக்கும் ஒரு முடிவே இல்லை.. அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்...
நாம் வாழும் வரை.... அடுத்தடுத்த *_எதிர்பார்ப்புகள்_*.... மேலே... மேலே... என்ற அடுத்த நிலைகள்... மனம் ஆவல்
பட்டுக் கொண்டே தான்
இருக்கும்..
ஆண்டவனின் அருளை பெறவதா.. தரிசனமா.. துறவறமா..அதுவும் இன்னம்... இன்னம்... என்ற தேடலாகவே தான் இருக்கிறது...
ஒன்றை அடைந்தால் அடுத்ததின் மேல் ஆசை... அடுத்து... அடுத்து.. என்று நீண்டு கொண்டே போகும்...
சுய திருப்தி.. மகிழ்ச்சியை அடைவதில் ஒரு வரையரை... போதும் என்ற
மனம்.. இவற்றை யாராலும் அடைய முடிவதில்லை...
தற்காலிக சந்தோஷம் தரக்
கூடியவைகளைக் கூட நாம்
விட்டு வைப்பதில்லை... திரும்பத் திரும்ப அந்த அனுபவங்களிலேயே திளைக்க தோன்றும்....
வெளிவர முடிவதில்லை. அப்படி தேடி.. தேடியே தான்
அமைதியற்றவராகின்றோம்.. மனநல பிரச்சனைகளும் அவரவர் நிலைக்கேற்ப ஆட்கொள்கின்றது....
*நம் மனதை
நம் வசபடுத்திக் கொள்வதை விட பெருமகிழ்ச்சி திருப்தி அளிக்கக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்...*
யோசியுங்களேன்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக