புதன், 15 மார்ச், 2017

சீறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நற்செய்தி

சீறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நற்செய்தி:

 ஊட்டத்தூர் சுத்த ரத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள சிறப்பு, நீர் கல் அடைப்பு ; கிட்னி சம்பந்தமாக உள்ள  வியாதிகளுக்கு சுத்த ரத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தை எடுத்து 48 நாட்கள் தினமும்  அருந்தி வந்தால் குணமடையும் என்று சொல்லப்படுகிறது. மருத்துவரால் கைவிடப் பட்டவர்கள் கூட இங்கு வந்து சாமி தரிசனம் செய்து பிரம்ம தீர்த்தம் சாப்பிட்ட பின் குணமடைந்து உள்ளது என்று சொல்கிறார்கள்.

கோவிலுக்குச் செல்லும் வழி:
திருச்சி - சென்னை செல்லும் வழியில் 30 கி.மீ. உள்ளது பாடலுர்.
பாடலுர் - ஊட்டத்தூர் 4 கி.மீ.
*சிவத்தை உணர !! அனுபவிக்க !! கொண்டாட !! என்ன செய்ய வேண்டும் ?? ( பலருக்கும் ஒத்துகொள்ள முடியாது ?? என்றாலும் உணர்த்திய மெய்யே இப்பதிவு )*

நமச்சிவாய

இதுதான் சிவம் என்று சொல்லமுடியாத !! வரைமுறை படுத்தமுடியாத !! எதற்குள்ளும் நிர்ணயம் செய்யமுடியாத !! ஒப்பிடமுடியாத !! என்று கூறிக்கொண்டே போகலாம் !! அத்தகையதொரு அறிய, அறியமுற்படும், என்றும் அறியவே முடியாத, உணரக்கூடிய, அனுபவிக்கவல்ல, கொண்டாடப்படும் அரும்பொருளே சிவம் !!

சிவத்தை நாட, அடைய, இதுதான் வழி என்று யாரால் வரையறுக்க முடியும், ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு வழியால் ஈர்ப்பு, உணர்வு, அனுபவம் !!

அத்தகைய ஈர்ப்பும், உணர்வும், அனுபவமும் இவ்வளவுதான் என்று உணர்ந்த, ஈர்த்த, அனுபவித்த யாரும் நிறைவு கொள்ள முடியாத அதையும்தாண்டி, அதையும்தாண்டி, இன்னும், இன்னும், இப்படியும், அப்படியும் என்று ஈர்ப்புக்குள் ஈர்ப்பு !! உணர்வுக்குள் உணர்வு, அனுபவத்துக்குமேல் அனுபவமே சிவம் !!

அங்ஙனம் இருக்க தொடங்க உதவ, உணரதூண்ட, அனுபவத்தை சொல்ல, மட்டுமே நூலறிவு, அனுபவ அறிவு, அதைமட்டும் அல்ல, எதைக்கொண்டு என்று தீர்மானிப்பவன் திருவருளால் ஈசனை நாடியபயணத்தில் இப்படித்தான், அப்படித்தான் என்று கூறவே முடியாது !! ஆனால் அடையும் இலக்காக சிவமே இருக்கும் !! அந்த சிவமும் இந்த ரூபம், அந்த உருவம் என்று அறியப்படாத ஒன்றே !!

ஆதலால் இப்பதிவே சிவத்தை உணர !! அனுபவிக்க !! கொண்டாட !! இதுதான் எல்லை என்று நின்று விடாமல், அதையும் தாண்டி இன்னும் உணர !! இன்னும் அனுபவிக்க !! இன்னும் கொண்டாட !! என்று முயல்பவருக்கே முடிவில்லாதவன் திருவருளை மேலும்மேலும் அனுபவித்து ஈசனை நாடி இட்டுசென்றுகொண்டே இருக்கும் !!

இதைத்தாண்டி போனால் பாவம் !! இதைத்தாண்டி உணர்ந்தால் தவறு !! இதைத்தாண்டி கொண்டாடினால் சாபம் !! என்று பயமுறுத்த பலவழிகள் சொன்னாலும் !! தடுத்தாலும் !! அத்தோடு நிற்காமல் எவனையும் கண்டுகொள்ளாமல் சிவனை கண்டு கொள்ள பயணியுங்கள் !!

இதுவரை திருநீறு – ருத்ராச்சம் தரிக்க தடை உடைத்த உங்கள் சிவபயணம் மேலும்மேலும் தொடர, வரைமுறைக்குள் சிக்காமல் சிவத்தை முன்னிறுத்தி தாண்டி பயணியுங்கள் !! தடுத்தவர்களுக்கு கிட்டாத திருவருள் உங்களுக்கு கிட்டும் !!

*தடைக்களுக்குள் சிக்கியவன் சிவத்தை வணங்குவான் !! தடைகளை தர்கர்த்து தாண்டி பயணிப்பவனே சிவனடி சேர்வான் !! சேர்ந்தவர்களை உணர் !! சேவிப்பவனை அடை !!*

திருச்சிற்றம்பலம்


நற்றுணையாவது நமச்சிவாயவே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக