புதன், 15 மார்ச், 2017

*எதார்த்தமாகவே இரு !! சிவத்தை உணர்வாய் !!*

*எதார்த்தமாகவே இரு !! சிவத்தை உணர்வாய் !!*

நமச்சிவாய

*எதார்த்தமாகவே வாழ்கிறோம் !! எதார்த்தமாகவே சிந்திக்கிறோம் !! எதார்த்தமாகவே அனைத்தையும் அனுபவிக்கிறோம் !! அங்ஙனம் இருக்க !! எவனையோ !! எதையோ !! கவர, விசுவாசமாக காட்டிகொள்ள, நல்லவன், வல்லவன் என்று ஊருக்கு காட்ட நடிக்கிறோம் !! உன் மனம் அறியும் எதார்த்தம் யாது என்று !!*

*அப்படி இருக்க, வழிபாட்டில், சிவத்தை பற்ற, அவரைப்போல் இருக்கவேண்டும், இதையெல்லாம் அறியவேண்டும், இப்படியெல்லாம் நடக்கவேண்டும், அந்த நிலையை நாம் எப்போது எய்துவது என்று அஞ்சி !! அவர்களெல்லாம் பெரிய அடியார், என்று உன்னை தாழ்த்தி நினைக்காதே !! ஏதோ அடியேன் கண்டு உணர்ந்தவரை, அடியேனையும் உட்டபட, பலரும் திருவேடம் தரித்து நடிக்கவே செய்கிறார்கள் !! அதை கண்டு இப்படியெல்லாம் நம்மால் முடியாது என்று எண்ணவே எண்ணாதே !!*

அவர்கள் திருமுறை பாடுகிறார்கள், பூஜை செய்கிறார்கள், நம்மால் அப்படி முடியுமா !! என்று எதார்த்தமாக எண்ணுகிறாயே !! அதுவே மெய் !! அந்த மெய்யே மெய்யானவனை நாடி இட்டுசெல்லும் !! அதைதான் மெய்யும் விரும்பும் !!

மறைகள் தெரியவேண்டாம் !! முறைகள் தெரியவேண்டாம் !! ஈசா நீ போதும் என்ற எண்ணம் மட்டுமே போதும் !! சிவமே எனக்கு திருமுறை தெரியாது !! பூஜிக்க தெரியாது !! ஏதோ கும்புடுகிறேன் !! என்னுள் என்ன வரவேண்டும் !! என்ன விலகவேண்டும் !! என்று தீர்மானிப்பவன் நீ !! உன்னை பிடித்துகொள்கிறேன் நீ எப்படியோ இட்டுசெல் !! என்று மனதில், சொல்லில், செயல்லில், சிந்தையில், எண்ணத்தில், எதார்த்தமாக பற்றுங்கள் போதும் !! அதைவிட சிறந்த வழிபாடே இல்லை !!

அறியாமலே அப்படி தான் பயணித்தோம் யாருடன் பயணிக்கிறோம் என்று உணர்ந்து எதார்த்தமாக பயணியுங்கள் போதும் !!

உங்களுக்குள்ளே வரும் எந்த எண்ணத்தையும் ஏன் இப்படி எண்ணுகிறேன், செய்கிறேன், நடக்கிறேன் என்று எதிலும் விலக்காமல் எதார்த்தமாகவே ஈசனிடம் கேளுங்கள் !!

உங்களுக்கான விளக்கம் உங்களுள்ளே விளக்கப்படும் !! உங்களுக்கு எது தேவையோ அது தானே வந்து அடையும் !! கற்றவனைவிட, பெற்றவனைவிட, அறிந்தவனைவிட, உங்கள் சொல், செயல், மிளிரும் !! நீங்களே ஆச்சரியப்படும் விதத்தில் !!

எந்த வழியில் ஈசனை இன்னும் நெருங்கி அனுபவிக்கலாம் என்று எங்கேயோ போய் கற்கவேண்டாம் உங்களுக்குள் உங்களை சுற்றி எதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகள் மூலம் கற்பிப்பான் கருணையாளன் !! 

*உங்களுக்கு எது தேவையோ, நூல் – உணர்த்தல் – உணர்வித்தல் போன்றவை நிகழும், அதை உணரும் அறிவு, அதை சிந்திக்கும் திறன், அதை வெளிபடுத்தும் வாய்ப்பு, எப்போது, எங்ஙனம் என்று வெளிப்படும்போது உணர்ந்து அனுபவிப்பிர்கள் ஈசன் கருணையை !!*

*பீடிகை, பந்தா, வேஷம், எதுமில்ல எதார்த்தமும், இயல்பும் ஈசனை அடைய எளிதாக வழிவகுக்கும் !!*

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக