புதன், 15 மார்ச், 2017

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் & நவரத்தினங்கள்...

சித்தர்களின் சொன்ன வழிமுறையில் செய்யப்பட்ட ஐம்பொன் மோதிரங்கள் & நவரத்தினங்கள்...

நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்...

ஐந்து  விதமான உலோகத்தினை சரியான அளவில் கலந்து செய்யப்படும்,ஐம்பொன்சிலைகள் இதில்,தங்கம்,வெள்ளி,இரும்பு,செம்பு,ஈயம் போன்ற உலோகங்கள் சரியான அளவில் கலந்து செய்யப்படும்,இந்த சிலைகள் பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்,

காரணம்,நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது,மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும் ,இந்த உலோக சத்துக்கள் தான் நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை,நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது,அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது ,இதில் தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,செம்பு சூரியனின் சக்தியையும்,இரும்பு சனியின் சக்தியையும்,ஈயம் கேதுவின் சக்தியையும் இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும் ,உடலினை குளிர்ச்சி படுத்தும்,ராஜ உறுப்புகளான இதயம் ,மூளை ,நுரையீரல் ,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் ,இதன் அறிவியல் விளக்கத்தை காண்போம்

மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.

இந்த பகுதிகளில் ஐம்பொன்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .


ஐம்பொன் மோதிரம் மற்றும் காப்புகள் வாங்கும்போது சித்தர் பூஜையில் வைத்து அதற்கேற்ற சக்திகளை ஏற்றி நல்லபடியாக வாழ்க்கை வளம்பெற தருகிறோம்,இதன் மூலம் எந்தவிதமான தோஷங்கள் இல்லாமல் உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்பதில் எந்தவித ஐயம் வேண்டாம்.

கிரகத்தில் உள்ள நல்ல கதிர்களை எப்படி நாம் உடலுக்குள் எடுப்பது ,அது என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று காண்போம்

முத்து கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய ரத்தினம் முத்து. எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம்.

கடகம் – முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

வைரம் உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.
கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் வைரம் அணியலாம்..!
ரிஷபம் – வைரம்
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.

துலாம் – வைரம்
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

வைடூரியம் இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும்.
சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நிலையான வருமானம் அமையும். முகத்தில் வசீகரம் உண்டாகும் .
அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும் இந்த கல்லை அணியலாம்

மாணிக்கம்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும். வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும்மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.
மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .

சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும். எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். மேலும் கிருத்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம்.

சிம்மம் – மாணிக்கம்
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

மரகத பச்சை ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.

பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்..
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம்

கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது

மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.

புஷ்பராகம் இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.

கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.
தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு, மீன ராசிக்காரர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம்

மீனம் – கனக புஷ்பராகம்.
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

தனுசு – கனக புஷ்பராகம்.
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

பவழம்
இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் பவழம் அணியலாம்.

மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

விருச்சிகம் – பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

நீலம் ஞானம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.

தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள்; மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள் நீலம் அணியலாம்.

மகரம் – நீலக்கல்
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

கும்பம் – நீலக்கல்
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது

கோமேதகம்
புத்திசாலிதனத்தையும், கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும். அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும். தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும். வாக்கு வசியம், வாக்கு சாதுர்யம் உண்டாகும். அரசியல் வாதிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.

உத்தியோக உயர்வை கொடுக்கும், தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
திருவாதிரை, சுவாதி,சதய நட்சத்திர காரர்கள். கோமேதகம் அணியலாம்.

                   கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி அணிவது போன்றே நல்ல கிரகங்களின் கதிவீச்சைப்   பெறுவதற்கு நாம் நவரத்தின கற்களை உபயோகப்படுத்துகிறோம்.  ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கதிர்களை நம்முடைய பிரபஞ்சத்தில் உமிழ்து கொண்டு இருக்கிறது அவை மனித உடலில் பல மாற்றங்கள் ஏற்ப்பட காரணமாகவும் அமையும்.ஒவ்வொரு ரத்தினங்களும் அதன் அலை நீளதிற்க்கு உட்பட்ட கதிர்களை உள் வாங்கும் தன்மை கொண்டவை .

      இந்த அறிவியலை நம்முடைய முன்னோர்கள் கணித்துத்தான் ,ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு எந்த கதிர்விச்சு குறைவாக உள்ளதோ அல்லது எது அவனுக்கு அதிகமாக தேவை என்பதை கணித்து அந்தந்த கதிர்களை உள்வாங்கி கொடுக்கும் ரத்தினங்களை மனித உடலில் முக்கியமாக ஆற்றலை உள்வாங்கும் இடங்களில் அணிய செய்து அவனை ஒரு நல்ல சக்தி நிலையமாக வைத்துகொள்ள உதவினர் .கால போக்கில் வியாபாரமும் பணத்தசையும் சேர்ந்து கொண்டதால் மூட நம்பிக்கையை புகுத்தி இந்த அற்ப்புதமான அறிவியலை கெடுத்துவிட்டனர்,
அதாவது, சூரியன் ஆரஞ்சு நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள எலும்போடு தொடர்புடையவை. சூரியனுடைய காந்த அலைக்கதிர்கள் வாழ்வில் வெற்றியையும் அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவையனைத்தையும் அளிக்க வல்லவை. புதன், பசுமை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலில் உள்ள தோலோடு தொடர்புடையன. இந்த காந்த அலைக்கதிர்கள் நமக்கு அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவை அனைத்தையும் அளிக்க வல்லவை.

சுக்கிரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நமது உடலில் உள்ள சுக்கிலத்தோடு தொடர்புடையன. இக்கதிர்கள் நமக்கு மனமகிழ்ச்சியையும், உயர் நட்பையும், வாழ்க்கை வளங்களையும் அளிக்க வல்லது. சந்திரன் வெண்மை நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டிருக்கிறது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள ரத்தத்தோடு தொடர்புடையன. இந்த காந்த அலைக்கதிர்கள் நம் உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தை சீரமைப்பது; அறிவு வளம், வாழ்க்கை வளங்கள் ஆகியவற்றை அளிக்கவல்லது.
.
செவ்வாய் செந்நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் உடலிலுள்ள மஜ்ஜையோடு தொடர்புடையன. இந்த காந்த அலைக்கதிர்கள் விஞ்ஞான அறிவையும் மெய்யறிவையும் தைரிய உணர்வையும் வாழ்க்கை வளத்தையும் அளிக்கவல்லவை. குரு பொன்னிறமான காந்த அலைக் கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக்கதிர்கள் நம் மூளைசெல்களோடு தொடர்புடையன. குருவினுடைய காந்த அலைக்கதிர்கள் மெய்யுணர்வையும் அனைத்து வாழ்க்கை வளங்களையும் அளிக்கவல்லன.
.
சனி சாம்பல் நிறமான காந்த அலைக் கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இந்தக் கதிர்கள் உடலில் உள்ள நரம்புகளோடு தொடர்புடையன. சனியினுடைய இந்த சாம்பல் நிறமான காந்த அலைக்கதிர்கள் நீண்ட ஆயுளையும் உடல்நலத்தையும் அளிக்கவல்லன. ராகு, கேது காந்த அலைப் பாதைகளிலிருந்து கருமை நிறமான காந்த அலைக் கதிர்கள் வீசிக்கொண்டுள்ளன. இக்கதிர்கள் நம் உடலில் உள்ள ஓஜஸ் என்ற சுத்த சக்தியோடு தொடர்புகொள்கின்றன. இந்த காந்த அலைகள் மெய் விளக்கம், உடல்நலம், வாழ்க்கை வளங்கள் ஆகியவற்றை அளிக்கவல்லன. .
நவரத்தினங்களை வாங்கும்போது சித்தர் பூஜையில் வைத்து அதற்கேற்ற சக்திகளை ஏற்றி நல்லபடியாக வாழ்க்கை வளம்பெற தருகிறோம்,இதன் மூலம் எந்தவிதமான கல் தோஷம் மற்றும் பிற தோஷங்கள் இல்லாமல் உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னும் நவரத்தினங்களும் ஒன்று சேர்ந்து சித்தர்கள் பூஜையில் வைக்கும் பொழுது இதன் ஆற்றல் பன்மடங்காக பல்கி பெருகும் என்பது நாங்கள் கண் கூடாக கண்ட உண்மை..


சிவயநம சிவயநம நமசிவய
 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக