பண பெட்டி வைக்கும் அறை:-
வீட்டில் பண பெட்டி வைக்கும் அறையை சரியாகத் தேர்ந்தெடுப்பது
முக்கியம். வீட்டின் செல்வச்செழிப்பு இந்த அறையைதான் அதிகம்சார்ந்துள்ளது. வடக்கு
மத்திய பகுதி குபேரனுக்கு உரிய அறையாகும். எனவே இந்த அறையில்தான் பண பெட்டியை வைக்க
வேண்டும் பணபெட்டி வடக்கு. நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வடக்கு
திசைக்கு அடுத்தபடியாக தெற்கு திசை அறையில் பண பெட்டியை அமைக்கலாம். வடகிழக்கு
அறையில் பண பெட்டியை வைக்க நேர்ந்தால் அந்த அறையின் தென் மேற்கு மூலையில் அதை வைக்க
வேண்டும் வடமேற்கு மூலையில் வைக்க நேர்ந்தால் பணபெட்டியை வடக்குச் சுவரை தொடாத
வகையில் வைக்கவேண்டும். தென் கிழக்கு அறையில் பண பெட்டியை எக்காரணம் கொண்டும்
வைக்கக் கூடாது. அப்படி வைத்தாள் பணவிரயம் அதிகமாக இருக்கும்.
பணபெட்டி நல்ல கனமாக இருபது அவசியம். பணபெட்டியை ஒரு அலமாரியில்
வைப்பதாகயிருந்தால் அது தெற்குச்சுவரையே அல்லது மேற்குச் சுவரையோ தொட்டுக்
கொடிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பண பெட்டி வைக்கும் அறையின் கதவு ஒற்றை
படையில் இருபது நல்லது. இதனால் பண பெட்டியில் வைக்கும் பணம் நாளுக்கு நாள்
பெருகும். பண பெட்டி அறையின் நுழைவு வாயில் வடக்கு, கிழக்கு,வடகிழக்குத் திசைகளில்
இருபது நலம். வீட்டின் தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையும் பண பெட்டி வைபதற்கு
பொருத்தமான அறையாகும். இங்கு பண பெட்டி வைத்தாலும் செல்வம் பெருகும்.
பணத்தை அலமாரியில் வைக்கும் போது அதில் கனமான பொருள் எதுவும்
இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அலமாரியில் பணத்தை மேல் தட்டிலோ அல்லது
நடுத்தட்டிலோதான் வைக்க வேண்டும். கீழ்த் தட்டில் கண்டிபாக வைக்கக் கூடாது.
பணத்தையும் துணியையும் ஒரே பெட்டியில் வைக்கக் கூடாது. பண பெட்டியில் வாசனை
திரவியங்களை போட்டு வைக்கக் கூடாது. பண பெட்டி ஆடாமல் அசையாமல் இருக்கும்படி அதை
உறுதியாக நிறுத்த வேண்டும். பணபெட்டியை முழுவதும் காலி செய்து விடாமல் அதில் ஒரு
ரூபாயாவது போட்டு வைக்க வேண்டும். பண பெட்டியை எபோதும் தூய்மையாக வைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக