வெள்ளி, 9 ஜூன், 2017
ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?
·
ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?
1.
ஜோதிட ஆலோசனை. பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.
2.
ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய
ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்டமாட்டார்கள்.
3.
ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு, நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு, காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி
தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.
4.
ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும், குணமும் உள்ள
ஜோதிடர்களிம் இவ்வாறு நடந்து கொள்பவர்களுக்கு நிச்சயம் இது நடக்கும்.
5.
ஜோதிட ஆலோசனை கேட்பவர் மௌனமாக அமைதியாக இருந்து ஜோதிடர் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். அலட்சிய மன போக்கை தவிர்க்க வேண்டும். ஜோதிடர் ஏதாவது கெடு பலன் சொன்னால் பரிகாரம் ஏதாவது உண்டா என கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சண்டைக்குப்போகக்கூடாது. வாக்கு வாதத்தில் ஈடுபடக்கூடாது.
6.
ஜோதிடர் சொன்ன ஆலோசனையில் திருப்தியில்லையென்றால் அல்லது பிடிக்கவில்லையென்றால் அமைதியாக திரும்பி வந்துவிடவேண்டும்.
7.
ஒரு ஜோதிடர் சொன்ன விசயங்களை இன்னொரு ஜோதிடரிடம் சொல்லக்கூடாது. ஜோதிடர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இது ஜோதிடருக்குள் வெறுப்புணர்ச்சியை தூண்டும். இதனால் உங்களுக்கு உரிய ஆலோசனையை அவர்
வழங்க மாட்டார்.
8.
ஜோதிடரிடம் சென்று எனக்கும் ஜோதிடம் தெரியும், சும்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பார்க்க வந்தேன் என்று சொல்லக்கூடாது. இப்படி சொல்வதால், ஜோதிடருக்கு உங்கள் மீது வெறுப்பு உணர்ச்சி தோன்றி எதையும் சரியாக பார்க்க மாட்டார். நவ கிரகங்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
9.
தேவை
இருந்தால் மட்டும் ஜோதிட ஆலோசனை பெறுங்கள். பொழுது போக்கிற்காக ஜோதிடரை பார்க்காதீர்கள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
1௦.ஜோதிடர்களுக்கு தட்சிணை வழங்குவது என்பது நீங்கள்
அவர்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்
என்பதைபொறுத்தது. ஜோதிடர்களை பிச்சைக்காரர்களாக
கருதாதீர்கள்.
11.வா வா என கூவி
அழைக்கும் ஜோதிடர்களை தவிர்த்து,
சத்தமில்லாமல் செயல்படும் நல்ல ஜோதிடர்களை
தேடிப்போய் ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக உங்களுக்கு
தெரிந்த நபர்கள் பரிந்துரை செய்யும் ஜோதிடர்களைப்போய் பாருங்கள்.
12.ஜோதிட ஆலோசனைப்பெறும்போது சொந்தக்காரர்களையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ உடன் அழைத்து
செல்லாதீர்கள்.
சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது .....
சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் .
"இந்த பணம்
அரசுக்கு சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள்....
.
மனதை மாற்றும் முறை
என்பது இதுதான் .
"This is
called "Mind Changing Concept” Changing the conventional way of
thinking."*
.
அங்கே ஒரு பெண்
கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல
என்று மிரட்டி அமர வைத்தான்....
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை
என்று சொல்கிறோம்.
"Being
Professional & Focus only on what you are trained""*
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான்.
" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்" என்று. மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
*This is
called "Experience.” Nowadays, experience is more important than paper
qualifications! "
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல்
அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்"
என்றார் .
.
"காற்றுள்ள போதே
தூற்றிக் கொள் "என்பது இது தான் .
*This is
called Swim along with the tide....Converting an unfavourable situation to yours.*
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்" என்றார்.
.
" கலியுகம்" என்பது இது தான்.
*This is
called Killing boredom World. Personal happiness is much more important than
your job.*
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய்
பணத்தை எண்ண தொடங்கினர் .
எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து " நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி
கொள்ளையடித்தோம். ஆனால் இந்த
வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி
கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழது .இதற்கு தான்
படித்திருக்க வேண்டும்" என்றான்.
.
*True.
Knowledge is nowadays very important than money in this world.*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)