திங்கள், 26 ஜூன், 2017
செவ்வாய், 20 ஜூன், 2017
ஞாயிறு, 18 ஜூன், 2017
ஞாயிறு, 11 ஜூன், 2017
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதது...
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.
அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.
1.
சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும்.
2.
சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.
3.
சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது
செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையா நடக்காது.
4.
குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும்.இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.
5.
சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
6.
சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண
நேரம் குறைந்தது 5 மணி நேரங்களாகும்.பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம்
வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.
7.
சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.
8.
குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.
9.
சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ
பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு
கீழ்நோக்கி செல்லாமல் மேல்
நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.
வெள்ளி, 9 ஜூன், 2017
இந்தியாவில் 10 ல் 7 அரசு அலுவலகங்களில் வேலையை முடிக்க லஞ்சம் வழங்க வேண்டி உள்ளது...
*இந்தியாவில் 10 ல் 7 அரசு அலுவலகங்களில் வேலையை முடிக்க லஞ்சம் வழங்க வேண்டி உள்ளது ஆய்வில் தகவல்*
ஆசியாவில் லஞ்சம் ஊழல்
மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 69 சதவீதம் பெற்று முதல் இடத்திலும் தொடர்ந்து வியட்நாம், தாய்லாந்து,பாகிஸ்தான், மியான்மர் ஆகிய
நாடுகள் உள்ளன.
டிரான்ஸ்பிரன்ஸி இன்டர்நெஷனல் என்ற அமைப்பு சார்பாக 16 ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதிக ஊழல்- லஞ்சம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 10 ல் 7 பேர் அரசு அலுவலகங்களில் தங்களின் பணிகள் முடிய லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள
சுமார் 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிரான்ஸ்பிரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாக லஞ்சம் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக காவல்துறையில் லஞ்சம், முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை மீறுவதற்காக அதிகளவு லஞ்சம் வழங்கப்படுவதாகவும், சீனாவிலும் அரசு
இயந்திரத்தை சட்டத்திற்கு விரோதமாக நகர்த்த லஞ்சம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கல்வி, மருத்துவம், சட்டம் ஒழுங்கு என்று அனைத்து முக்கியத்துறைகளிலும் லஞ்சம் அளிக்காமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை எனவும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லஞ்சத்தால் அரசின் உதவிகள் கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊழல் - லஞ்சமற்ற சமுதாயம் உருவாக்கப்படும் என்ற உறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்களும் அந்த வாக்குறுதிகளை பதவியில் அமர்ந்தவுடன் மறந்துவிடுவதே இந்தியாவின் இந்நிலைக்கு காரணம் எனவும் குறித்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் லஞ்சத்தை ஊக்கவிக்காத நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)